துணை மின்நிலையத்தை விவசாயிகள் முற்றுகை


துணை மின்நிலையத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 6:45 PM GMT)

சாத்தான்குளம் அருகே துணை மின்நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே சவேரியார்புரம் செல்லும் சாலையில் அப்பகுதி விவசாயத்துக்கு மின்சாரம் வினியோகிக்கும் வகையில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ந்தேதி பனைக்குளம் பகுதியில் ஏற்பட்ட மின் பிரச்சினை காரணமாக சவேரியார்புரம் செல்லும சாலையோரம் இருந்த மின் மாற்றியில் பொருட்கள் எடுத்து அப்பகுதியில் மின்வினியோகம் சரி செய்யப்பட்டுள்ளது. மறுநாள் சவேரியார்புரம் மின்மாற்றி சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் வழங்குவதாக மின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் 3 நாட்களாகியும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை.

இதனால் வயலில் உள்ள நாற்றுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று சவேரியார்புரம் மின் மாற்றியை சீரமைத்து அப்பகுதி விவசாயத்துக்கு மின்வினியோகம் வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு அங்குள்ள மின் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், உடனடியாக சீரமைத்து மின் வினியோகம் வழங்குவதாக உறுதியளித்ததையொட்டி அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story