உளுந்து கழிவுகளை விற்று லாபம் பார்க்கும் விவசாயிகள்


உளுந்து கழிவுகளை விற்று லாபம் பார்க்கும் விவசாயிகள்
x

தாயில்பட்டி பகுதிகளில் உளுந்து கழிவுகளை விற்று விவசாயிகள் லாபம் பார்த்து வருகின்றனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி பகுதிகளில் உளுந்து கழிவுகளை விற்று விவசாயிகள் லாபம் பார்த்து வருகின்றனர்.

உளுந்து சாகுபடி

தாயில்பட்டி, பூசாரிநாயக்கன்பட்டி, ஜமீன்கல்லமநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, வல்லம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த பகுதியில் உளுந்து அறுவடை பணிகள் நிறைவடைந்தன. இதில் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்ட உளுந்து கழிவுகள் மாட்டு தீவனத்திற்காக கிலோ ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் லாபம்

இந்த உளுந்து கழிவுகள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு சத்தான உணவாக குறைந்த விலைக்கு கிடைப்பதால் அருகில் உள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்தினை சாகுபடி செய்து அறுவடை செய்து விட்டோம். செடியில் இருந்து உளுந்தினை பிரித்து விட்டு மீதி உள்ள கழிவுகளை விற்று வருகிறோம். கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றிற்கு உணவுக்காக இதனை வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் லாபம் பார்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story