உழவர்சந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உழவர்சந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
பழனி உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகள் நேற்று காலை திடீரென சந்தையின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது உழவர்சந்தை முன் பகுதியில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட பெட்டிக்கடைகளில் காய்கறிகள் விற்கப்படுகிறது.. இங்கு அதிக விலைக்கு காய்கறி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிப்படைகின்றனர்.
எனவே இந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டம் காரணமாக உழவர் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story