விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்


விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்
x

திருப்பனந்தாளில் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இயங்கிவரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்பக் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைப்பெற்றது. வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்கநர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் சிவா சுப்பரமணியம் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்குள் விவசாயிகள் இயற்கை வேளாண்மை, பாரம்பரியம் மற்றம் புதிய நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள், இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகளுக்கான கண்டுணர்வு சுற்றுலா மற்றும் பாரம்பரியம் நெல் சாகுபடி, தீவனபுல் மேலாண்மை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றி கூறினார்.


Next Story