விவசாயிகள் சங்க கூட்டம்


விவசாயிகள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 2:42 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே அகரஎலத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரராஜ் பேரவை கொடியை ஏற்றிவைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார். கூட்டத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் உள்ள குவாரியில் மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும். கடந்த பருவமழை காலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story