விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி
செங்கோட்டை அருகே விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் அதிகாலை வயல்வெளி விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் பல்வேறு வட்டாரங்களில் இந்த ஆய்வுப் பணியையும் விவசாயிகளை வயல்வெளியில் சந்திப்பதுமான பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி வயல்வெளி விவசாயிகள் சந்திப்பை செங்கோட்டை வட்டாரம் புளியரை பகுதியில் மேற்கொண்டார்.
அப்போது விவசாயிகளிடம் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் தார் சாலைகளில் கேஜ் வீலை ஓட்டி சாலைகளை சேதப்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் நேரடி நெல் விதைப்பு எவ்வாறு என்பதை செயல் விளக்கமாக செய்து காண்பித்தார். திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியரை உதவி வேளாண்மை அலுவலர் முகமது ஜலால் மைதீன் செய்திருந்தார்.