விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்; அதிகாரிகள் தகவல்


விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்; அதிகாரிகள் தகவல்
x

விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை

மத்திய, மாநில அரசுகள் மூலம் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டமானது அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் நகல், பட்டா நகல், விவசாயினுடைய புகைப்படம், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் பயன்பெற முடியும். எனவே விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர், வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரை அணுகி பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story