விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மெலட்டூர் அருகே தடுப்பணை கட்டும் பணியை தரமாக செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூர்

மெலட்டூர்

மெலட்டூர் அருகே தடுப்பணை கட்டும் பணியை தரமாக செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தடுப்பணை கட்டும் பணி

பாபநாசம் அருகே உள்ள காவளூர் தோட்டம் பகுதியில் ரூ.4.88 கோடியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணை கட்டும் பணி தரமின்றி நடைபெறுவதாக கூறி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் காவளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினாா்.

தடுப்பணை மீது ஏறி கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தடுப்பணை கட்டும் பணி தரமாக கட்டப்படவில்லை என கூறி தடுப்பணை மீது ஏறி பொதுப்பணித்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார், தெற்கு மாவட்ட தலைவர் மணி, விவசாய சங்க நிர்வாகிகள் செந்தில், வெங்கடேசன், வையச்சேரி ஊராட்சி தலைவர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story