விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் நேற்று கரிசல்மண் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் மனு வழங்கினர்.
அதில், ''கயத்தாறு தாலுகா குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து வெயிலுகந்தபுரம் கிராமத்தில் இருந்து சங்கரலிங்கபுரம் செல்லும் வண்டிப்பாதையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் விதிகளுக்கு மாறாக களிமண் மூலம் சாலை அமைக்கப்படுகிறது. எனவே உரிய விதிகளின்படி தரமான சாலை அமைக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story