பட்டீஸ்வரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பட்டீஸ்வரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவாக பட்டீஸ்வரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

பாபநாசம் ஒன்றியம், திருமண்டங்குடி பகுதியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை மற்றும் மத்திய- மாநில அரசுகள் வழங்கிய கரும்புக்கான ஊக்கத்தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் மோசடியாக வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளி்ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமண்டங்குடியில் உள்ள சர்க்கரை ஆலையின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில், திருமண்டங்குடியில் போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக பட்டீஸ்வரம் கடைவீதியில் தமிழக உழவர் முன்னணி மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் இணைந்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் பட்டீஸ்வரம் பகுதி பொறுப்பாளர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் கரும்புகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைப்போல நேற்று காலை சுவாமிமலை அருகே நாகக்குடி கிராமத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story