பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
x

சீர்காழி, தரங்கம்பாடியை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேட்டங்குடி சீனிவாசன் வரவேற்பு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பேசினார். அப்போது அவர், கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க வேண்டும். தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சீர்காழி, தரங்கம்பாடி, தாலுகாவில் விடுபட்ட வருவாய் கிராமங்களுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து விவசாயிகள் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று உதவி கலெக்டர் அர்ச்சனாவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.


Next Story