நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பாளையங்கோட்டை தாலுகா நிர்வாகிகள், விவசாயிகள் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பாளையங்கால்வாய் மூலம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் தற்போது கால்வாய் முழுவதும் அமலை செடிகள் படர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கழிவு பொருட்களும் தேங்கி கிடக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கும்போது முழுமையாக பாளையங்கால்வாயில் தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்படும். எனவே பருவமழைக்கு முன்பாக பாளையங்கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story