தரையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சாணார்பட்டி அருகே கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தரையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட சாணார்பட்டி ஒன்றியக்குழு சார்பில் எமக்கலாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாய சங்க ஒன்றிய அமைப்பாளர் சின்னராஜ் தலைமை தாங்கினார். பசும்பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51-ம் உயர்த்தி தமிழக அரசு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் தங்களது மாடுகளுடன் பங்கேற்றனர். அப்போது சிலர், கேன்களில் கொண்டு வந்திருந்த பாலை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வெள்ளை கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story