ஏரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஏரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏரல்:
இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளையனே வெளியேறு தின ஆர்ப்பாட்டம் ஏரல் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் டி.சீனிவாசன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் கே.ராமச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் அ.சுவாமிதாஸ் ஒன்றியதலைவர் பி.பொன்ராஜ், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பி. தங்கராஜ், விவசாய சங்க ஒன்றிய தலைவர் எஸ்.பூலான், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் வி.கிரேஸி பாலம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு. ஜே.பெஸ்டி நன்றி கூறினார்.