மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

கொரடாச்சேரி:

இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவரான பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ெரயில் நிலையம் அருகே ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும். வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி போலீஸ்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கேசவராஜ், தம்புசாமி, சேகர் மற்றும் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story