திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கடை புருசோஷத்தமன் தலைமை தாங்கினார்.

கால்நடை விவசாயிகள் மூலம் பெறப்படும் ஒரு லிட்டர் பாலுக்கு கொடுக்கக்கூடிய ரூ.29-ல் இருந்து ரூ.3 விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்கியதை ரூ.8 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் நெய்யை கையில் ஊற்றி சுவைத்தவாறு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகள் கூறியதாவது:-

கொள்முதல் செய்யப்படும் பாலை ஆவின் நிறுவனத்தின் மூலம் குளிரூட்டி சமன்படுத்திய பால் ஒரு லிட்டர் ரூ.40-க்கு நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. மேலும் 3.5 சதவீதம் கொழுப்பு நீக்கிய ஒரு லிட்டர் சமன்படுத்திய பாலின் மூலம் கிடைக்கும் 35 கிராம் நெய் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.

ரூ.8 உயர்த்தி வழங்க வேண்டும்

பால் மற்றும் மதிப்புக்கூட்டி கிடைத்த நெய்யின் மூலம் ரூ.60 ஆவின் நிறுவனத்துக்கு கிடைக்கிறது. ஆனால் கால்நடை விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ.29-க்கு கொள்முதல் செய்திருந்த நிலையில் ரூ.3 கூட்டி ரூ.32 கொடுக்கப்படுகிறது.

தற்போதை நிலையில் மாட்டு தீவனம், உலர் தீவனம், பராமரிப்பு, மருத்துவ செலவு, புண்ணாக்கு விலை உயர்வை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு லிட்டருக்கு ரூ.8 உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story