கம்பி வேலியை அகற்றக்கோரி தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்


கம்பி வேலியை அகற்றக்கோரி தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்
x

கம்பி வேலியை அகற்றக்கோரி தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்

திருச்சி

திருச்சி மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே 40 ஆண்டுகளாக தரைக்கடை நடத்தி வரும் வியாபாரிகளை காலி செய்து மாநகராட்சி நிர்வாகம் கம்பி வேலி அமைத்தது. இதை கண்டித்தும், கம்பிவேலியை அகற்றி கடைகள் போட அனுமதிக்கக்கோரியும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று காலை கடை போடும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. தரைக்கடை சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வி, தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கம்பி வேலி அகற்றி விடுகிறோம். நாளை முதல் எடுக்கப்பட்ட கடையை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story