விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கருகிவரும் 3 ஆயிரம் ஏக்கர் வாழைப்பயிரை காக்க அணையிலிருந்து 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கருகிவரும் 3 ஆயிரம் ஏக்கர் வாழைப்பயிரை காக்க அணையிலிருந்து 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம் மற்றும் பேரூர் குளம் மூலம் 3 ஆயிரம் ஏக்கரில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த குளங்ளில் தண்ணீர் இல்லாததால் வாழைகள் கருகி வருகின்றன.
தண்ணீரின்றி கருகி வரும் வாழைகளை காக்க இரண்டு குளங்களுக்கும் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்தில் இறங்கி கருப்பு கொடி ஏந்தி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரை மாற்ற வேண்டும், கருகும் வாழை பயிர்களை காப்பாற்ற உடனடியாக அணையிலிருந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மருதூர் கிழக்கால் மடை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா, மூலக்கரை, பேரூர் கஸ்பா, பராக்கிரமபாண்டி, திருப்புளியங்குடி, நலன்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கலந்து ெகாண்டனர். உடனடியாக குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இரண்டு குளங்களின் பாசன விவசாயிகளை ஒன்று திரட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.