மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

மொளசி அருகே 10-வது நாளாக மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

மொளசி அருகே பிலிக்கல்மேடு பகுதியில் நேற்று 10-வது நாளாக 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாடுகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாம் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும், பயிர் காப்பீட்டு திட்டங்களை ஒவ்வொரு விவசாயியும் பயன்பெறும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story