மன்னார்குடியில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில்உற்பத்தி- விற்பனை நிலையம் தொடக்கம்
மன்னார்குடியில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் உற்பத்தி- விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவாரூர்
மன்னார்குடியில், கூத்தாநல்லூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளின் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு நிறுவன தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். வேளாண் விற்பனை துறை அலுவலர் ரோஷன் ஷர்மிளா, இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ஜெயகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் அபிநயா வரவேற்றார். இதில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஷ்வந்த் கண்ணா கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில் இயக்குனர்கள் ரவிச்சந்திரன், சுந்தரி, விஜயலட்சுமி, சுஜா, சாந்தி, முதன்மை செயல் அலுவலர்கள் ராஜேந்திரன், அறிவழகன், சுதமதி, கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story