கோவில்பட்டி உழவர் சந்தையில் விவசாயிகள் கடைவாடகையின்றி காய்கறிகளை விற்பனை செய்யலாம்
கோவில்பட்டி உழவர் சந்தையில் விவசாயிகள் கடைவாடகையின்றி காய்கறிகளை விற்பனை செய்யலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் முருகப்பன் மற்றும் கோவில்பட்டி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சந்திர நாகர், உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், சரவணகுமார் ஆகியோர் தோணுகால், கங்கன் குளம், இனாம் மணியாச்சி பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறி வகைகள், மற்றும் பழங்கள் குறித்து நிலங்களுக்கு சென்று நேரடியாக ஆய்வு நடத்தினா். பின்னர் வேளாண்மை துணை இயக்குனர், விவசாயிகளிடம் பேசும் போது, கோவில்பட்டி உழவர் சந்தையில் மொத்தம் 76 கடைகள் உள்ளன. இவற்றில் 36 கடைகள் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை நேரடியாக கடை வாடகை இன்றி, பொதுமக்களிடம் விற்பனை செய்து பயனடையலாம் என்று கூறினார்.
Related Tags :
Next Story