நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன் பெற வேண்டும்- வேளாண்மை உதவி இயக்குனர்


நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன் பெற வேண்டும்- வேளாண்மை உதவி இயக்குனர்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல் அறுவடைக்கு பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன் பெற வேண்டும் என்று கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலெட்சுமி அறிவுறுத்தி உள்ளார்.

நாகப்பட்டினம்

நெல் அறுவடைக்கு பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன் பெற வேண்டும் என்று கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலெட்சுமி அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் தரிசு

கீழ்வேளூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 10,200 எக்டர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கீழ்வேளூர், தேவூர், கிள்ளுக்குடி, ஆந்தக்குடி, வலிவலம் ஆகிய 5 வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் தரிசில் உளுந்து, பயறு வகை பயிர்களை பயிரிடலாம். இதன் மூலம் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

தழைச்சத்து

பயறு வகை பயிர்களின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் பாக்டீரியா, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த உதவுகிறது. மண்ணின் அங்கக கரிம சத்துக்கள் அளவு அதிகரிக்கிறது. இதை பயிர் சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது.

எனவே கீழ்வேளூர் வட்டாரத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story