மானிய விலை உபகரணங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி விவசாயிகள் சாலை மறியல்


மானிய விலை உபகரணங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாட்டில் மானிய விலை உபகரணங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டில் மானிய விலை உபகரணங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உபகரணங்கள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சில பகுதிகளை சேர்ந்த தகுதியான விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் தேர்வு செய்யாமல், பாரபட்சத்துடன் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன், சங்க மாவட்ட செயலாளர் மணி, சங்க ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள் திடீரென தஞ்சை- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் தென்னமநாடு பைபாஸ் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

விவசாயிகளின் திடீர் சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொடர்புடைய வேளாண்மைதுறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story