அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் அவதி
வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
நெல் சாகுபடி
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எனவே இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை, தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கொள்முதல் நிலையம்
இப்பகுதியில் அறுவடை தொடங்கிய உடனே அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இந்தநிைலயில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் அறுவடை செய்யப்படும் நெல்லை இப்பகுதியில் உள்ள தனியார் வியாபாரிகளிடம் அவர்கள் சொல்லும் விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.
இதனால் நாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
எனவே இப்பகுதி விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு உடனடியாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.