யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் வேதனை
வேலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். உரிய நேரத்தில் உரம் போடவில்லையென்றால், நெற்பயிர் மற்றும் மணிலா பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படுட வாய்ப்பு உள்ளது.
தற்போது மானாவாரி பட்டத்தில் மணிலா, உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளது. மணிலா உள்ளிட்ட பயிர்கள் பூப்பூக்கும் பருவத்தை தாண்டி, மகசூல் வைக்கும் பருவ நிலையில் உள்ளது. மானாவரி பயிர்கள் கடைபிடிக்கும் விவசாயிகள் மழை பெய்யும் நேரத்தில் மட்டுமே யூரியா போன்ற உரங்களை பயிருக்கு பயன்படுத்துகின்றனர். தற்போது யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அடி உரம் இடமுடியாமல் விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.
அதேபோல் ஆடிப்பட்டத்தில் நெல், கரும்பு, வாழை மற்றும் கத்திரி, வெண்டை, அவரை போன்ற தோட்டக்கலை பயிர்களும் காய் காய்க்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் செடிகளுக்கு அடி உரமிட யூரியா உரம் கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.