விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பயறு விற்பனை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சை, பாபநாசம் ஒரத்தநாடு, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் வருகிற 1-ந்தேதி முதல் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விலை ஆதரவுத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படவுள்ளது. உளுந்து கிலோ ரூ.66 என்ற விகிதத்திலும், பச்சைப்பயறு கிலோ ரூ.77.55 என்ற விகிதத்திலும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், மேல உள்ளூர், ஈச்சங்கோட்டை, திருவையாறு மற்றும் தென்னமநாடு பகுதியைச் சார்ந்த விவசாயிகள். பயறு வகைகளை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்வதால் நேரிடும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் முனைப்பு இயக்கம் தஞ்சையில் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பிரசார கண்காணிப்பாளர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.