விவசாய சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
x

விவசாய சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் டார்ச் லைட் அடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் திருஞானம் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சேசுராஜ் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story