செஞ்சியில் விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு


செஞ்சியில்    விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

விழுப்புரம்

செஞ்சி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி வட்டக்குழு கருணாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உடனடியாக சென்று, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரண அறிவிப்புகளை வெளியிட்ட முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகளை கட்டி வருவதை ஒன்றிய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை விரைவாக முடித்து செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி பகுதி விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விடவேண்டும். மேல்மலையனூரில் ஓடும் வராக நதியை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ், மாநில குழு லட்சுமி, ஏழுமலை, மாவட்ட குழு ராமமூர்த்தி, ஏழுமலை, செல்வம் வட்டக் குழு அமுதா, முனுசாமி, தேவி, சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story