தேயிலை வாரிய செயல் இயக்குனரிடம் விவசாயிகள் ேகாரிக்கை


தேயிலை வாரிய செயல் இயக்குனரிடம் விவசாயிகள் ேகாரிக்கை
x

பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, தேயிலை வாரிய செயல் இயக்குனரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி

குன்னூர்,

பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, தேயிலை வாரிய செயல் இயக்குனரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பச்சை தேயிலை

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே, பச்சை தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் தேயிலை கிலோவுக்கு ரூ.7 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தேயிலைக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்ய கோரி செப்டம்பர் மாதம் 14-ந் ேததி தேயிலை வாரியம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

குறைந்தபட்ச விலை

இதுகுறித்து நேற்று விவசாயிகள் சங்க தலைவர் ஐ.போஜன் தலைமையில் துணைத்தலைவர்கள் மூர்த்தி, சதிஷ்பெள்ளன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தேயிலை வாரிய செயல் இயக்குனரை நேரில் சந்தித்து விவாதித்தனர். அதன் பின்னர் சங்க தலைவர் ஐ.போஜன் கூறும்போது, ‌

தென்னிந்திய தேயிலை வாரியம் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்காக எவ்விதமான போராட்டத்திலும் ஈடுபட சங்கம் முடிவு செய்து உள்ளது. பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.50 எதிர்பார்த்து உள்ளோம். இதனை தேயிலை வாரிய செயல் இயக்குநரிடம் கூறிய போது, விலை உயர்வுக்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அவரிடம் உண்ணாவிரத போராட்டம் குறித்து தெரிவித்தோம் என்றனர்.



Next Story