வாடிப்பட்டி அருகே விவசாயிகள் அடிப்படை விவரங்கள் பதிவேற்றும் பணி- வேளாண் ஆணையர் நேரில் ஆய்வு


வாடிப்பட்டி அருகே விவசாயிகள் அடிப்படை விவரங்கள் பதிவேற்றும் பணி- வேளாண் ஆணையர் நேரில் ஆய்வு
x

வாடிப்பட்டி அருகே விராலிபட்டியில் விவசாயிகள் அடிப்படை விவர பதிவேற்ற முகாமினை மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி திடீரென்று நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே விராலிபட்டியில் விவசாயிகள் அடிப்படை விவர பதிவேற்ற முகாமினை மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி திடீரென்று நேரில் ஆய்வு செய்தார்.

வேளாண் ஆணையர் ஆய்வு

வாடிப்பட்டி வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக விராலிப்பட்டி பஞ்சாயத்தில் வேளாண்மை அடுக்கு என்ற விவசாயிகள் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் முகாம் நடந்தது. முகாமை வேளாண்மை உற்பத்தி ஆணையர் அரசு செயலாளர் சமய மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விராலிப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 804 புல எண்களில் 517 புல எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள புல எண்கள் விரைந்து பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் நில விவரங்கள் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களை வேளாண்மை சார்ந்த 13 துறைகளின் திட்டங்களை ஒற்றை சாளர வலைதள மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

அரசு நலத்திட்டங்கள்

நிதி திட்ட பலன் ஆதார் எண் அடிப்படையில் வங்கிக்கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும். இந்த வலைதளம் பதிவேற்றம் செய்வதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய முடியும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பலன் பெறலாம். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், 300 குடும்பங்களுக்கு 2 தென்னங்கன்று வழங்குதல், திரவ உயிர் உரம், தெளிப்பான்கள் மற்றும் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்பாலின் உள்ளிட்டவைகள் மானியத்தில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலெக்டர்

இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அமுதன், வேளாண்மை துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ராணி, தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி, வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை வளர்மதி, மதுரை கோட்டாட்சியர் சுகிபிரேமலா, வாடிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சண்முகப்பிரியா, தாசில்தார் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story