விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க நூறுசதவீதம் மானியம்


விவசாயிகள் சொட்டுநீர் பாசனம்   அமைக்க நூறுசதவீதம் மானியம்
x

உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் தரிசு நிலங்களை விளை நிலமாக்கும் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று வேளாண்மைஉதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் தரிசு நிலங்களை விளை நிலமாக்கும் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று வேளாண்மைஉதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னுரிமை பஞ்சாயத்துகள்

திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில ்தரிசு நிலங்களை விளை நிலமாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக உள்ள தங்களது நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இத்திட்டத்தில் சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம், பிச்சிவிளை, வெங்கட்ராமானுஜபுரம், சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, சீர்காட்சி மற்றும் மணப்பாடு கிராம பஞ்சாயத்தில்உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நூறு சதவீதம் மானியம்

இதர கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும் தரிசுகளை சீர்படுத்தி சாகுபடி செய்யப்படும் பயிருக்கு ஏற்ப பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 75சதவீதம் மானியம் மற்றும் துணைநிலை நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் புதிதாக ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், மற்றும் நீர்சேமிக்கும் தொட்டி அமைக்க மானியமும் விதிமுறைக்குஏற்ப வழங்கப்படுகிறது.

சொட்டுநீர்பாசனம் அமைக்க ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 12½ ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு நகல், ஸ்மார்டு கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகநகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் தரிசு அடங்கல், கணினி பட்டா ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story