நீர்தேக்க உடைப்பை சீரமைத்த விவசாயிகள்


நீர்தேக்க உடைப்பை சீரமைத்த விவசாயிகள்
x

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் நீர்த்தேக்க உடைப்பை விவசாயிகள் சீரமைத்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சியில் கோணலாறு நீர்தேக்கம் உள்ளது. இந்த நீர்தேக்கத்தில் இருந்து கிடைக்கிற தண்ணீர் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு கோணலாறு நீர்தேக்கத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறியது. இதைத்தொடர்ந்து நீர்தேக்கத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் சேர்ந்து நீர்தேக்க உடைப்பை தற்காலிகமாக நேற்று சீரமைத்தனர். எனினும் நீர்தேக்கத்தை முழுமையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைக்கிராம விவசாயிகள் தாங்களாக முன்வந்து நீர்தேக்கத்தை சீரமைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story