தாளடி பயிருக்கு இயற்கை வேளாண் முறையில் மருந்து தெளிக்கும் பணி


தாளடி பயிருக்கு இயற்கை வேளாண் முறையில் மருந்து தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 15 Nov 2022 12:45 AM IST (Updated: 15 Nov 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் பகுதியில் தாளடி பயிருக்கு இயற்கை வேளாண் முறையில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

திருவாரூர்

நீடாமங்கலம் பகுதியில் தாளடி பயிருக்கு இயற்கை வேளாண் முறையில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

3 போகம் சாகுபடி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி ஆண்டு தோறும் 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலமாக திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, மன்னார்குடி உள்ளிட்ட 10 வேளாண் கோட்டங்களிலும் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்த பணிகள் தற்போது முடிவடைந்து தாளடிக்கான நடவு வயலில் பூச்சி மருந்து தெளிக்கும் பணி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

அறுவடை பணிகள்

இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் நடந்தது. எந்திரம் மூலம் குறுவை அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது. சில இடங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள் சம்பா பருவத்தில் ஒரு போகம் மட்டும் 8,448 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

இதற்காக நாற்றங்கால் தயார் செய்து நாற்று விட்டு தற்போது சம்பா மற்றும் தாளடி நடவு பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த கோடை பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி பணி நடந்து அறுவடை முடிந்த பிறகு குறுவை சாகுபடி பணி தொடங்கியது.

மீன் அமிலம்

நீடாமங்கலம் பகுதியில் அறுவடை முடிந்த உடன் தாளடி நடவு பணி நடந்தது. முன்கூட்டியே தாளடி பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

இதற்காக இயற்கை வேளாண் முறையில் ரசாயன உரமான யூரியாவிற்கு பதில் மீன் அமிலம் மருந்தை தெளிக்கும் பணி நடந்து வருகிறது. நீடாமங்கலம் அருகே மேலப்பூவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.


Next Story