குறுவை சாகுபடி ஆயத்த பணிகளில் விவசாயிகள் மும்முரம்


குறுவை சாகுபடி ஆயத்த பணிகளில் விவசாயிகள் மும்முரம்
x

தஞ்சை பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாய்நாற்றங்காலுக்கான உழவுப்பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாய்நாற்றங்காலுக்கான உழவுப்பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தண்ணீர் திறப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு வழக்கம் போல ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடி

இந்த அறிவிப்பைத்தொடர்ந்து தஞ்சை பகுதிகளில் உள்ள வயல்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக வாழமரக்கோட்டை, வரவுக்கோட்டை உள்ளிட்ட பகுதி வயல்களில் பாய்நாற்றங்கால் அமைப்பதற்காக உழவுப்பணிகள் தீவிரமான நடந்து வருகிறது.இதன்மூலம் தண்ணீர் திறக்கப்பட்டதும் குறுவை சாகுபடியை உடனே மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதனால் வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பணிகள் தீவிரம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது வயல்களில் உள்ள களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். வயலை உழுது சீராக்கி கொண்டால் நாற்று விட்டு நடும் பணிகளை விரைவாக தொடங்கி விடலாம்.அதுமட்டுமின்றி சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்படுவதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறினர்.


Next Story