பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து உண்ணாவிரதம்


பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து உண்ணாவிரதம்
x

பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் நடைபெற்றது.

திருச்சி

திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலைகுடியிருப்பில் பாய்லர் ஆலை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாய்லர் ஆலை தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். இங்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், பி.எப்.பணத்தை வங்கியில் செலுத்தாததை கண்டித்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்புபேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இது சம்பந்தமாக எழில் நகரை சேர்ந்த மனோகர் (வயது 34), குமரேச புரத்தை சேர்ந்தபாலசுப்ரமணியன் (37) ஆகியோரை ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துஉள்ளது. இதனை கண்டித்து பாய்லர் ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் பாய்லர் ஆலை மருத்துவமனை முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story