உண்ணாவிரதம்
முழையூர் ஊராட்சியில் ரேஷன் கடை-குடோன் கட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் உண்ணாவிரதம் நடந்தது.
தஞ்சாவூர்
கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்ரஹாரம் பகுதியில் முழையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள இந்திரா நகரில் ஊராட்சிக்கு சொந்தமான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். இதன் பின்புறம் ரேஷன் கடை மற்றும் குடோன் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த பணிகள் தொடங்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story