பெருந்துறையில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலி


பெருந்துறையில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலி
x

பெருந்துறையில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலி

ஈரோடு

பெருந்துறை

பீகார் மாநிலம் மெட்ராபுர் மாவட்டம் பைசாலியைச் சேர்ந்தவர் அர்பிந்த். கூலித்தொழிலாளி. இவர் பெருந்துறை திருவேங்கிடம்பாளையம் புதூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருடைய மனைவி நேற்று மாலை தன்னுடைய 5 வயது மகன் அம்ரேஷ்குமாரின் கையை பிடித்தபடி பெத்தாம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் அம்ரேஷ்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். உடனே அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவில் அம்ரேஷ்குமார் பரிதாபமாக இறந்தான்.

இதேபோல் பெருந்துறை திருவேங்கிடம்பாளையம்புதூர், தங்கம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 65). இவர் நேற்று பெத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக, வேலுச்சாமியின் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story