சித்தோடு அருகே லாரி- கார் மோதல்; டிரைவர் பலி


சித்தோடு அருகே லாரி- கார் மோதல்; டிரைவர் பலி
x

சித்தோடு அருகே லாரி- கார் மோதல்; டிரைவர் பலி

ஈரோடு

பவானி

சேலம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மேற்பார்வை தலைமை என்ஜினீயராக பணியாற்றி வருபவர் சுரேஷ் (வயது 50). இதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் டிரைவராக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிைலயில் பணி நிமித்தமாக சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சுரேஷ் சென்றார். காரை பச்சியப்பன் ஓட்டினார். காரானது ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு நசியனூர் அருகே சென்றபோது முன்னால் போய்க்கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும் எதிரே வந்த மற்றொரு லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். மேலும் காரில் இருந்த என்ஜினீயர் சுரேஷ் காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுபற்றி அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பச்சையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story