விஜயமங்கலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு


விஜயமங்கலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு
x

விஜயமங்கலம் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி என்ஜினீயர் இறந்தார்.

ஈரோடு

பெருந்துறை

விஜயமங்கலம் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி என்ஜினீயர் இறந்தார்.

என்ஜினீயர்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள சோமநாதமங்கலத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 27). என்ஜினீயரிங் முடித்துள்ள மணிகண்டன் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள கிணிப்பாளையத்தில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பல்லக்கவுண்டன்பாளையத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு 11 மணியளவில் தான் தங்கியுள்ள கள்ளியம்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.

மரத்தில் மோதியது

அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story