மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்: முதியவர் சாவு; சிறுவன்-சிறுமி படுகாயம்
மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். சிறுவன்- சிறுமி படுகாயம் அடைந்தார்கள்.
பெருந்துறை
மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். சிறுவன்- சிறுமி படுகாயம் அடைந்தார்கள்.
வேன் மோதியது
பெருந்துறை அருகே உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 68). மின் மோட்டார் மெக்கானிக்.
இந்தநிலையில் செல்வம் நேற்று காலை பெருந்துறையில் உள்ள தன்னுடைய மகள் கவுசிகா வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் ெசன்றார். பின்னர் அங்கிருந்து தனது பேரன் கவினேஷ் (11), பேத்தி நசுதனா (4) ஆகியோரையும் அழைத்துக்கொண்டு வெள்ளியம்பாளையத்துக்கு சென்றுகொண்டு இருந்தார்.
காஞ்சிக்கோவில் பிரிவு தேசிய நெடுஞ்சாலையை கடக்க ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது, சேலத்திலிரூந்து கோவையை நோக்கி வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது திடீரென மோதியது.
வலைவீச்சு
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து செல்வம், கவினேஷ், நசுதனா ஆகியோர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் செல்வம் இறந்துவிட்டார். சிறுவனுக்கும், சிறுமிக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ெபருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசுதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.