பவானிசாகர் அருகே மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் சாவு; நண்பர்கள் 2 பேர் காயம்


பவானிசாகர் அருகே மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் சாவு; நண்பர்கள் 2 பேர் காயம்
x

பவானிசாகர் அருகே மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் சாவு; நண்பர்கள் 2 பேர் காயம்

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள பட்டரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ராம்குமார் (22), பிரனேஷ் (22). இவர்கள் முத்துக்குமாரின் நண்பர்கள் ஆவர். முத்துக்குமார், ராம்குமார், பிரனேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11.50 மணி அளவில் ஒரே மோட்டார்சைக்கிளில் புங்கார் சின்னபண்ணாரி அம்மன் கோவிலில் திருமண விழா முடித்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை முத்துக்குமார் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

ராஜன்நகர் மொக்கை என்ற இடத்தில் சென்றபோது லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் இறந்தார். காயமடைந்த மற்ற 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story