லாரியில் இருந்து கீழே விழுந்த டிரைவர் சாவு


லாரியில் இருந்து கீழே விழுந்த டிரைவர் சாவு
x

லாரியில் இருந்து கீழே விழுந்த டிரைவர் சாவு

ஈரோடு

சிவகிரி

கர்நாடக மாநிலம் மாரட்டள்ளியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 33). சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கத்தரிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (43). இருவரும் லாரி டிரைவர்கள்.

கடந்த 30-ந் தேதி 2 பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் பகுதியில் இருக்கும் அரிசி ஆலைக்கு லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தனர். அம்மன்கோவிலுக்கு லாரி சென்றபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ரோட்டு ஓரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மாதேஷ் எழுந்து லாரியில் இருந்து இறங்க முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story