விபத்தில் வாலிபர் பலி
விபத்தில் வாலிபர் பலி
கவுந்தப்பாடி
திண்டுக்கல் மாவட்டம் பழனி குதிரையார்டேம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (27). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோபியில் உள்ள நண்பரை பார்க்க ஈரோட்டில் இருந்து கோபிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர். கவுந்தப்பாடி அருகே உள்ள செட்டிகரடு என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தபோது மோட்டார்சைக்கிளின் டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் பிரேம்குமார் இறந்தார். நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஸ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.