நிலம் வாங்குவதற்காக காரில் வந்த சென்னை தொழிலதிபரை தாக்கி ரூ.33 லட்சம், 24 பவுன் நகையை கொள்ளையடித்த கார் டிரைவர் தந்தையுடன் கைது


நிலம் வாங்குவதற்காக காரில் வந்த சென்னை தொழிலதிபரை தாக்கி ரூ.33 லட்சம், 24 பவுன் நகையை கொள்ளையடித்த கார் டிரைவர் தந்தையுடன் கைது
x

நிலம் வாங்குவதற்காக காரில் வந்த சென்னை தொழிலதிபரை தாக்கி ரூ.33 லட்சம், 24 பவுன் நகையை கொள்ளையடித்த கார் டிரைவர் தந்தையுடன் கைது

திருப்பூர்

மூலனூர்

நிலம் வாங்குவதற்காக காரில் வந்த சென்னை தொழிலதிபரை தாக்கி ரூ.33 லட்சம், 24 பவுன் நகையை கொள்ளையடித்த கார் டிரைவர் தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை தொழிலதிபர்

சென்னை வில்லிவாக்கம் வடக்கு செங்குன்றம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 46). தொழிலதிபர். இவர் நிலம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து காரில் அரவக்குறிச்சி- மூலனூர் வழியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வந்து கொண்டிருந்தார். காைர பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கார்டன் பகுதியை சேர்ந்த பரத் (22) என்பவர் ஓட்டிச்சென்றார். காரில் ரூ.33 லட்சம் மற்றும் 24 பவுன் நகையை பாஸ்கரன் வைத்திருந்தார்.

கடந்த 28-ந்தேதி இரவு 10.45 மணிக்கு திருப்பூர் மாவட்டம், மூலனூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று 50 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் காரை வழிமறித்தார். இதனால் பரத் காரை நிறுத்தினார். அப்போது அந்த ஆசாமி பாஸ்கரனை இரும்பு கம்பியால் தாக்கி ரூ.33 லட்சம் மற்றும் 24 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றான். பாஸ்கரனை அந்த ஆசாமி இரும்பு கம்பியால் தாக்கும்போது டிரைவர் பரத் தடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மூலனூர் போலீசில் பாஸ்கரன் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் டிரைவர் பரத்தை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

தந்தை-மகன் கைது

சென்னையில் இருந்து நிலம் வாங்க பொள்ளாச்சி வந்த பாஸ்கரனிடம் ரூ.33 லட்சமும், 24 பவுன்நகையும் இருப்பதை பரத் தெரிந்து கொண்டார். இதையடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தனது தந்தை குமாரை (47) செல்போனில் தொடர்பு கொண்டு திட்டத்தை கச்சிதமாக முடிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி பரத் ஓட்டி வந்த கார் மூலனூர் பகுதியில் வந்ததும், காரை நிறுத்தி குமார் கொள்ளையடித்து சென்றதும் தெரியந்தது. இதையடுத்தை குமார் மற்றும் பரத்தை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் மற்றும் 24 பவுன்நகை, இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான தந்தை, மகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாகுல் ஹமீது, மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், முத்துக்குமார், விஜயகுமார், தவசியப்பன், தனிப்பிரிவு போலீசார் சதிஸ்குமார் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பாராட்டினார்.

---

3 காலம்

கைதான தந்தை-மகனையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணத்தை படத்தில் காணலாம்


Next Story