விவசாயியை தாக்கிய தந்தை, மகனுக்கு ஓராண்டு ஜெயில்


விவசாயியை தாக்கிய தந்தை, மகனுக்கு ஓராண்டு ஜெயில்
x

விவசாயியை தாக்கிய தந்தை, மகனுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி

அம்பை:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள மேல ஏர்மாள்புரம் அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் சேகர். விவசாயியான இவரும், இவரது அண்ணன் அண்ணாதுரை மற்றும் அக்காள் தனலட்சுமி ஆகிய 3 பேரும் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி நாடார் மகன் கணபதி நாடார், அவரது மகன் சுரேஷ் மற்றும் உறவினர்கள் வந்து, எனது தம்பி வீட்டை எப்படி விலைக்கு கேட்கலாம் எனக்கூறி அரிவாள் மற்றும் கம்புகளால் தாக்கியுள்ளனர். இதில் சேகர் மற்றும் அவரது அண்ணன், அக்காள் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அம்பை சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்து கணபதி நாடார், அவரது மகன் சுரேஷ் ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 5 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் திருமலை குமார் ஆஜரானார்.


Next Story