சங்கராபுரம் அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது
சங்கராபுரம் அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டாா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த முனியப்பிள்ளை மகன் மூர்த்தி (வயது 17) கோவையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். உறவினர் விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவரது தந்தை முனியப்பிள்ளை (60) வீட்டின் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தபோது துணி விலகி இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் விலகி இருந்த துணி மீது துண்டை போட்டுள்ளனர். அதற்கு மூர்த்தி துண்டையெல்லாம் ஏன் போட்டீர்கள்?, யார் துவைப்பது? என கேட்டதாக தெரிகிறது. இதனால் முனியப்பிள்ளைக்கும், மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனியப்பிள்ளை அருகில் இருந்த அரிவாளை எடுத்து மூர்த்தியை வெட்டினார். இதில் காயமடைந்த மூர்த்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாாின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பிள்ளையை கைது செய்தனர்.