மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுங்குராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 41). இவருடைய மனைவி அழகுலட்சுமி. பாலமுருகன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 2-வது மகன் கடந்த 9 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதில் பாலமுருகன் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று அழகு லட்சுமி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வந்து அழகு லட்சுமி பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.