கடலூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்


கடலூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் அடுத்த புதுச்சத்திரம் பூவாலை பழைய தபால் நிலைய தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் பரமேஸ்வரி (வயது 23). இவர் புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

இ்ந்த நிலையில் பரமேஸ்வரி, அதே கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் பரமேஸ்வரி தனது படிப்பை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று பரமேஸ்வரிக்கும், இளவரசனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட பரமேஸ்வரி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைபார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாவில் சந்தேகம்

இதுபற்றி பரமேஸ்வரியின் தந்தை முருகேசன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story