ஆற்றூரில்3 மகள்களின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
ஆற்றூரில் 3 மகள்களின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
ஆற்றூரில் 3 மகள்களின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 மகள்களின் தந்தை
திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் கொழிஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), தொழிலாளி. இவருடைய மனைவி சுலக்ஷனா (43). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
ராஜேந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது மது குடித்துவிட்டு தான் வீட்டுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி நான் இருப்பதைவிட சாவது மேல் என்று புலம்பி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில், "இனிமேல் நான் வேலைக்கு செல்ல மாட்டேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள ரப்பர் மரத்தில் லுங்கியால் தூக்குப் போட்டு ராஜேந்திரன் தொங்கி கொண்டு இருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே ராஜேந்திரனின் மனைவிக்கு தகவல் கொடுத்தனர். அவர் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் ராஜேந்திரனை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராேஜந்திரன் இறந்து விட்டதாக கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து சுலக்ஷனா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து ராேஜந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி வருகிறார்.