தந்தை-மகன்களை தாக்கியவர் கைது
கண்ணமங்கலம் அருகே தந்தை-மகன்களை தாக்கியவர் கைது
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46).
இவர் தனது மகன்கள் லோகேஷ், ராகுல் ஆகியோருடன் நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்த்துவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
அப்போது ராமச்சந்திரபுரம் குளம் அருகே இருந்த ரெட்டிபாளையம் சுரேஷ், நவீன், சிங்கிரிகோவில் சூரியா, மேல்கல்பட்டு மோகன்ராஜ் ஆகியோரிடம் வழிவிடும் படி கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் சேர்ந்து, சிவக்குமார், ராகுல், லோகேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மேல்கல்பட்டு மோகன்ராஜை கைது செய்தனர்.
மேலும் நவீன், சுரேஷ், சூரியா ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.